Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Gingee Singavaram Sri Ranganatha Temple,Gingee Tamilnadu India.


Sri Ranganatha Temple,Gingee

The Senji Singavaram Ranganatha Temple (aka Singavaram Perumal Temple) is a cave-temple in India dedicated to God Ranganatha and Goddess Ranganayaki Thayar. The temple is a Pallava period structure, and was patronized by subsequent rulers.

The Singavaram Ranganatha temple is located about 4 miles from the Gingee Fort, with the Queen's Fort linked by tunnels to this temple.The 24 feet long idol of Ranganatha, carved from living rock, is in a reclining pose on the coils of the serpent Ananta. A panel in the rear wall depicts the Gandharvas and Brahma, in which Brahma is born from the navel of Vishnu. Besides Garuda, the demons Madhu and Kaitabha who were killed by Vishnu are depicted. Goddess Bhoomidevi graces the feet of the lord while Prahlada sits near his knee. Pallava cave temples, cut from rock, dating to the time of Mahendravarman or Narisimhavarman (580-688 AD), exist in Melacceri as Maddileshvara temple and at Singavaram as Ranganatha temple. As per the Mandagapattu inscription, the Pallava king, Mahendravarman I established the tradition of the Ranganatha temple. Historian KR Srinivasan suggests Durga and Vishnu of this shrine are similar to some cave shrines of Mahabalipuram; and suggests the name "Singavaram" might be derived from another Pallava king, Mamalla who was either Narasimha or Simhavishnu. KR Srinivasan also notes the Dwarapalas in this temple follow Pallava iconography. Durga with 4 hands holding the Shankha, Chakra, and two arms resting on her thigh and waist, stands on the head of Mahishasura.

Sri Ranganatha 24 Feet Long Idol (Photo by tamilnadu-favtourism.blogspot)




அருள்மிகு சிங்கவரம் பெருமாள் கோவில்

குடைவரைக் கோவிலான சிங்கவரம் பெருமாள் கோவிலில் சுமார் 14 அடி நீளத்தில் பெருமாள் வீற்றுள்ளார். கருவறையில் பெருமாள் சயன கோலத்திலும், முகப்பில் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் பெருமாள் அருள்பாலிக்கிறார்.



செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவின் குலதெய்வம் இந்த ரங்கநாதர். பெருமாளே நேரடியாகப் பேசும் அளவுக்கு ராஜா தேசிங்கு பெருமாளின் தீவிர பக்தர். ஒருமுறை ராஜா தேசிங்கு போருக்குச் செல்லவேண்டாம் என்று பெருமாள் சொல்லியும் போருக்குச் சென்றதால் பெருமாள் கோபம் கொண்டு தெற்கு நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். மேலும் தென்திசை தெய்வமான யமனை எச்சரிக்கும் விதமாகவும் பெருமாள் இப்படி திரும்பியுள்ளார் என்கிறார்கள். செஞ்சிக்கு அருகே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கவரம் திருத்தலத்தில் அருள்புரிகிறார் ஶ்ரீரங்கநாதர். சிம்மாசலம், சிம்மபுரம், விஷ்ணு செஞ்சி என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் தலத்தில், மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது சிங்கவரம் பெருமாள் ஆலயம். விழுப்புரத்தில் இருந்து சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவில்செஞ்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோவில். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 38யில் பயணித்தால் தும்பூர், சிட்டம்பூண்டி, செஞ்சிக் கோட்டை உள்ளிட்டவற்கைக் கடந்து மேலச்சேரிக்கு முன்னதாக இக்கோவிலை அடையலாம். பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகளும், தனியார் வாடகைக் கார் வசதிகளும் அதிகளவில் உள்ளன. அருள்மிகு சிங்கவரம் பெருமாள் கோவில் நடை காலை 7 மணி முதல் 12 மணி வரைவிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையில் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். 
.
 தொடர்புக்கு (Contact) : +91 9345879028
ஆலய அர்ச்சகர்  (Temple Archagar) : +91 8098329060 & +91 7904790607

Photographs Copyrights by Pondicherry Arun 

Find This Temple Location

Post a Comment

0 Comments