Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Sri Athi anandha Ranganadhar in Pondicherry 2019



புதுவையில் அத்திமரத்தலான அனந்த ரங்கநாதர்...!! புதுச்சேரி 200 ஆண்டுகள் பழமையான ராமானுஜர் பஜனை மடத்தில் அத்திமரத்திலான அனந்த ரங்கநாதர்...!! காஞ்சியெங்கும் தற்போது மக்கள் வெள்ளம் அத்திவரதரை தரிசிக்க குவிக்கின்றனர். . இதே போல் புதுச்சேரியிலும் அத்திமரத்தலான அனந்த ரங்கநாதர் சன்னதியுள்ளது. புதுச்சேரியில் செயின்ட் தெரசாவீதியிலுள்ள 200 ஆண்டு பழமையான ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்தரங்கநாதர் சன்னதியுள்ளது. ஆதிசேஷன் மீது அனந்த சயன கோலத்தில் ஆறு அடி நீளத்தில் அத்திமரத்தில் அனந்த ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சி தருகிறார். கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள இவர் கையில் சங்கு, சக்கராயுதம் ஏந்தியுள்ளார். இச்சிலை 2011 ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.ஆண்டுதோறும் இரு முறை அரங்கநாதருக்கு தைலக்காப்பு செய்து பாதுகாத்து வரப்படுகிறது. புதுச்சேரியில் இங்கு மட்டுமே அத்திமரத்திலான அனந்த ரங்கநாதரை தரிசிக்கலாம். மாதந்தோறும் ரேவதி, திருவாதிரை நட்சத்திர நாட்களில் சிறப்பு வழிபாடு உண்டு. ஆழ்வார் திவ்ய பிரபந்த சேவையும் சிறப்பாக நடைபெறும். சுக்கிர திசையில் பாதிப்பு உள்ளோர், திருமண தடையுள்ளோர் வெள்ளியன்று நெய்தீபம் ஏற்றி பெருமாளை பிரார்த்தித்தால் பலன் நிச்சயம்...
Location Map

Post a Comment

0 Comments